அதிமுகவுக்கு -2 திமுகவுக்கு ஒண்ணே- 1 ... இடைத்தேர்தலில் பரபர முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Sep 21, 2019, 3:40 PM IST
Highlights

திமுக, விக்கிரவாண்டியிலும், காங்கிரஸ் நாங்குநேரியிலும் போட்டியிடுகிறது. ஆக இரண்டு தொகுதிகளில்  திமுக ஒரே தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. ஏற்கனவே, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்தகுமார் சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் நாங்குநேரி தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான அறிவுப்பு வெளியானதும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என விரும்பிய அக்கட்சியின் மூத்த பிரமுகர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி தொகுதி  இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் நாளைமறுநாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 22 மற்றும் 23ம் தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். இதற்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாய்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். ஆனால் திமுக, விக்கிரவாண்டியிலும், காங்கிரஸ் நாங்குநேரியிலும் போட்டியிடுகிறது. ஆக இரண்டு தொகுதிகளில்  திமுக ஒரே தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. 

click me!