ஆண்மையுள்ள அரசா? ஆண்மையற்ற அரசா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் திமுகவை கோர்த்து விட்டு அதிமுக பாலிடிக்ஸ்!

By Thiraviaraj RMFirst Published Aug 22, 2020, 5:15 PM IST
Highlights

முதல்வர் வேட்பாளரை அறிவித்த பிறகே அதிமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
 

முதல்வர் வேட்பாளரை அறிவித்த பிறகே அதிமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளரும், முன்னாள் எம்.பி யுமான அன்வர் ராஜா கலந்து கொண்டார். அந்த கூட்டமுடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா “ஆண்மையுள்ள அரசா? ஆண்மையற்ற அரசா? என்பது வரும் சட்டமன்ற தேர்தலில் தெரியும். 1980 ஆண்டு தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் என இந்திரா காந்தி அறிவித்தார்.
 
அதேபோல 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது என் உயிருள்ள வரை நான் தான் முதல்வர் வேட்பாளர் எனவும், தனக்கு பிறகு ஸ்டாலின் இருப்பார் எனவும் கருணாநிதி அறிவித்தார். ஆகையால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால் தற்போது அதே நிலைமை நீடிக்காது. வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி, வேட்பாளரை அறிவித்து தான் அதிமுக தேர்தலை சந்திக்கும்”என அவர் கூறினார்.

click me!