குப்பைக்கு தங்க மோதிரம் வழங்கிய அதிமுக.. அமைச்சர் மா.சு வெளியிட்ட பகீர் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2021, 8:40 AM IST
Highlights

தங்க மோதிரம் வழங்கப்படுமென அறிவித்த இரண்டு ஆண்டுகளில் 5 ஆயிரத்து 300 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டது என்றும், ஆனால் அடுத்து வந்த ஆட்சியில் அந்த மோதிரத்தை குப்பையை தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு வழங்கியதாக கேள்விப்பட்டேன் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிராமணியன் அதிமுகவை விமர்சித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில்  அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் வழங்கப்படுமென அறிவித்த இரண்டு ஆண்டுகளில் 5 ஆயிரத்து 300 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டது என்றும், ஆனால் அடுத்து வந்த ஆட்சியில் அந்த மோதிரத்தை குப்பையை தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு வழங்கியதாக கேள்விப்பட்டேன் என மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிராமணியன் அதிமுகவை விமர்சித்துள்ளார். தமிழை திமுக அந்த அந்த அளவுக்கு நேசித்தது என்றும், பின்னர் வந்தவர்கள் அதை குப்பைக்கு வழங்கினர் என்றும் அவர் ஆவேசம்  தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கோ. திரு முருகன் என்பவர் எழுதிய குறள் அமிர்தம் என்ற திருக்குறள் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மா.சுப்பிரமணியன், பேருந்துகளில் திருக்குறளும், அதற்கான விளக்கவுரையும் இருக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருக்கிறாரே அதுபோல, நான் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சி பூங்காக்கள், அலுவலக கட்டிட வாயில்களில் வாயில்தோறும் வள்ளுவம் திட்டத்தைத் தொடங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய விளக்க உரை எழுதி வைத்தோம்.

இதையும் படியுங்கள்: அக்டோபர் 8 ஆம் தேதி போராட்டம் நடந்தே தீரும்.. திமிறும் திருமாவளவன்.. முதலமைச்சருக்கு நெருக்கடி.

அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஆட்சி மாறிய பின் ஆட்சியாளர்கள்  அந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை என்றார்.அதே போல மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆயிரத்து 300 குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறிய பின்னர் அந்த மோதிரங்களை குப்பையை தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு வழங்கியதாக கேள்விப்பட்டேன் என அவர் தெரிவித்தார். 

click me!