டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்து அழைப்பா? பதறிப்போன ஓபிஎஸ்..!

Published : Feb 10, 2019, 10:28 AM ISTUpdated : Feb 10, 2019, 10:31 AM IST
டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்து அழைப்பா? பதறிப்போன ஓபிஎஸ்..!

சுருக்கம்

டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அறிந்த ஓபிஎஸ் பதறிப் போய் அவசர அவசரமாக டிவீட் செய்துள்ளார். அதில் 18 எம்எல்ஏக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன் தவிர டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறப்பட்டு வரும் நிலையில், இன்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், கூட்டணி தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். 

மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் கட்சியில் வந்து இணைய வேண்டுமென ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு அனைவருக்கும் பொருந்தும் என கூறினார். இதனையடுத்து ஓபிஎஸ் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்தாக செய்திகள் வைரலாகின.

இது தொடர்பாக அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அவரது ட்வீட்டர் பக்கத்தில் டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல். 18 எம்எல்ஏக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!