அதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுக நற்பெயருக்கு களங்கம்... சசிகலாவை சந்தித்த எம்.எல்.ஏ. அதிரடி பேட்டி..!

Published : Feb 25, 2021, 08:41 PM IST
அதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுக நற்பெயருக்கு களங்கம்... சசிகலாவை சந்தித்த எம்.எல்.ஏ. அதிரடி பேட்டி..!

சுருக்கம்

அதிமுக-பாஜகவுக்கு இடையேயான உறவு அதிமுக  நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது என்று எம்.எல்.ஏ.வும் கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு தெரிவித்துள்ளார்.  

அதிமுகவின் இரட்டைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, சென்னையில் சசிகலாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக-பாஜகவுக்கு இடையேயான உறவு அதிமுக  நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. நிர்வாக ரீதியாக பாஜகவோடு உறவு வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அத்தனை திட்டங்களையும் தொடங்கி வைக்க மோடி, அமித்ஷா என பாஜகவினரையே அதிமுக அரசு அழைக்கிறது. அது அதிமுகவின் நற்பெயரை கெடுத்துவிடும்.
அதிமுகவும் அமமுகவும் ஒற்றிணைய வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த நல்ல செய்தி விரைவில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்தவர் சசிகலா. சிறைக்கு செல்வதற்கு முன்பு எந்த மன உறுதியுடன் இருந்தாரோ அதுபோலவே இருக்கிறார் சசிகலா. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக உள்ளது. ஆனால், கட்சி ரீதியாகத்தான் குளறுபடிகள் உள்ளன. ஒரு வேளை அதிமுகவும் அமமுகவும் இணைய வாய்ப்பில்லாமல் போனால்,  யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்” என்று தனியரசு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!