அதிமுக கூட்டணிக்கு- 27, திமுகவுக்கு -12 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு... அதிரடிக் கருத்துக்கணிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2019, 2:58 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 27 தொகுதிகளிலும், திமுக கூட்டணி தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 27 தொகுதிகளிலும், திமுக கூட்டணி தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

சிங்கப்பூரைச் சேர்ந்த ஐவா மீடியா நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதனடிப்படையில், மக்களவை தேர்தலில் அதிமுக 1.திருவள்ளூர், 2.தென்சென்னை, 3.காஞ்சிபுரம், 4.கிருஷ்ணகிரி, 5.ஆரணி, 6.திருவண்ணாமலை, 7.சேலம், 8.நாமக்கல், 9.ஈரோடு, 10.திருப்பூர், 11.நீலகிரி, 12.பொள்ளாச்சி, 13.சிதம்பரம், 14.கரூர், 15.மயிலாடுதுறை, 16.மதுரை 17.தேனி, மற்றும் 19.திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாமக 1.அரக்கோணம், 2.தர்மபுரி, 3.விழுப்புரம் 4.கடலூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்றும் என ஐவா மீடியா நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதேபோல், 1.பாஜக 2.கோவை 3.கன்னியாகுமரியிலும், தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி 1.வேலூர் தொகுதியையும், புதிய தமிழகம் கட்சி 2.தென்காசி தொகுதியையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 1.வடசென்னை, 2.மத்தியசென்னை, 3.ஸ்ரீபெரும்புதூர், 4.திண்டுக்கல், 4. தஞ்சாவூர் 5.தூத்துக்குடி ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், 1.திருச்சி, 2.சிவகங்கை, 3.விருதுநகர் தொகுதிகளிலும் பெரம்பலூர் தொகுதியை ஐ.ஜே.கே.வும், ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், நாகை தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் அதிமுக கூட்டணி 27 இடங்களையும், திமுக கூட்டணி 12 இடங்களையும் கைப்பற்றும் என ஐவா மீடியா கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த ஐவா மீடியா நிறுவனம் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. 

click me!