5 மாதங்களுக்கு பிறகு சென்னைவாசிகளுக்கு புதிய விடிவு... நெருக்கியடித்து கொண்டாட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 18, 2020, 12:04 PM IST
Highlights

சென்னையில் இன்று மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி ஐந்து மாதங்களுக்கு பிறகு குடிமகன்களுக்கு விடிவு கிடைத்துள்ளது. மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

சென்னையில் இன்று மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி ஐந்து மாதங்களுக்கு பிறகு குடிமகன்களுக்கு விடிவு கிடைத்துள்ளது. மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சென்னையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன. சென்னை மண்டலத்தில் 720 டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பாதுகாப்புடன் வரிசையில் நிற்கவும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 மதுவாங்க வருபவர்கள், சமூக இடைவெளி விட்டு நிற்க தரையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அதேபோல், கடையின் அருகில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மதுக்கடைகளை நடத்துவதில் பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் பின்பற்ற வேண்டியவை: டாஸ்மாக் கடைக்கு முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் 3 அடி இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரைய வேண்டும். ஒலிபெருக்கி மூலம் தேவையான அறிவிப்புகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

 

போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டர்களை அமைத்துக்கொள்ள வேண்டும். சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் கவுன்டர் அருகே அனுமதிக்க வேண்டும். காட்டன் கையுறை, முக கவசம் அணிந்து பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். கடையின் சுற்றுபுறத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் குடிமகன்கள் நெருக்கியடித்து சரக்கு பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

click me!