வக்கீல் சங்க தலைவர் பால் கனகராஜ் பிஜேபியில்... ஒட்டு மொத்த வழக்கறிஞர்களையும் தூக்க முடிவு..!

Published : Jun 12, 2020, 12:01 PM IST
வக்கீல் சங்க தலைவர் பால் கனகராஜ் பிஜேபியில்... ஒட்டு மொத்த வழக்கறிஞர்களையும் தூக்க முடிவு..!

சுருக்கம்

தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  

தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழ் மாநில கட்சி தலைவர் வழக்கறிஞர்பால் கனகராஜ்  தன்னை பாஜகவில் இணைத்துக்கெண்டார். தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் டாக்டர் திரு.A.முகமது ஃபெரோஸ் அவர்களும் இணைந்தார். இவர்களுடன் சுமார் 50பேர் இணைந்தனர். இந்த்ஃஅ விழாவில் பேசிய பால் கனகராஜ், ’சுயநலத்துக்காக பாஜகவில் இணையவில்லை; பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.

நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி’’ எனத் தெரிவித்தார். திமுக வழக்கறிஞர் அணி முன்னாள் உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரும், தமிழ் மாநில கட்சி நிறுவனருமாக பதவி வகித்தவர் பால் கனகராஜ். இவரைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பெரும்பாலானோரை பாஜகவிற்கு இழுத்து வர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!