இரட்டை இலை சின்ன வழக்கு கடந்துவந்த பாதை..!

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இரட்டை இலை சின்ன வழக்கு கடந்துவந்த பாதை..!

சுருக்கம்

admk symbol case in election commision

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா தலைமையிலும் பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டு அணிகள் செயல்பட்டன.

சசிகலா சிறைக்கு சென்றபிறகு தினகரன் தலைமையிலும் பன்னீர்செல்வம் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும் பன்னீர்செல்வம் தரப்பும் போட்டி போட்டது. இரு அணிகளின் தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் தர முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

தினகரன் தலைமையின் கீழ் செயல்பட்ட முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு தினகரன் மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து தினகரனை கழற்றிவிட்டு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. தங்கள் தரப்பு வாதத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தினகரன் தரப்பும் கோரியது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு அணிகளும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் பழனிசாமி தரப்பில் கூடுதல் ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தினகரன் தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதையடுத்து பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் 2400 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களும் தினகரன் தரப்பில் 1000 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இரட்டை இலை சின்ன வழக்கு விசாரணையில் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்திய தேர்தல் ஆணையம், இரு தரப்பிடமும் தனித்தனியே விசாரணை நடத்தியது.

இரட்டை இலை பலகட்ட விசாரணைகளை நடத்திய தேர்தல் ஆணையம், இருதரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன் சின்னத்தை ஒதுக்க வேண்டும். மேலும் நவம்பர் 10-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எனவே இன்றைய விசாரணையின் முடிவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?