கொடுத்த பதவியை மறுக்கும் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள்!! வேறு பதவிகள் கேட்டு குடைச்சல் கொடுக்கும் மாஜிக்கள்… விழி பிதுங்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Sep 15, 2018, 6:21 AM IST
Highlights

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக  ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் நியமிக்கபபட்ட நிலையில் நீண்ட நாட்களாக நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நிர்வாகிகள் அறிவிப்பு வெளியான நிலையில், பலர் சீனியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் இந்த இரட்டையர்கள் திக்கித் திணறி வருகின்றனர்.

ஜெயலலிதா . மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு ஏற்பட்டு தற்போது எடப்பாடி, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பில் புதிய அ.தி.மு.க.வில் முக்கிய தலைவர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு வெளியிடுவதிலேயே பெரிய முட்டல் மோதல்களிலே இருந்து வருகிறது. அதனால் ஏற்கனவே் அறிவிப்பு பாதி வெளியாகி பாதியிலே நின்று போனது.

ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த பரஞ்சோதிக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

அறிவிப்பு கொடுக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஓ.பி.எஸ்.யை தொடர்பு கொண்ட பரஞ்சோதி எனக்கு வயசாயிடுச்சு எனக்கு போய் இளைஞர் இளம் பெண்கள் பாசறையினா கிண்டல் பண்ண மாட்டாங்களா? நானே ஸ்டாலினை பல மேடைகளில் கிண்டல் பண்ணியிருக்கேன். அதுவும் இல்லாமல் மருத்துவர் ராணியோட பிரச்சனை இப்ப தான் முடிஞ்சது.

அதனால் இந்த பதவி எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட சரி நா வேற பதவி வாங்கி தரேன் என்று சொல்லி 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டவுடன் பரஞ்சோதி சென்னைக்கு சென்று துணை முதலமைச்சர்  ஓ.பி.எஸ் நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். 

அ.தி.மு.க. கட்சியில் திருச்சி அரியலூர் பகுதியில் முக்கியமான நபர் இளவரன். கட்சியில் திருச்சி விமானநிலையத்தில் ப.சிதம்பரத்தை இரும்பு ராடால் தாக்கியே கட்சியில் பெரிய பதவிகளை வகித்தவர்.

 

அவர் சார்ந்த சமூகத்தில் சீனியர்களில் இவர் முக்கியமானவர். ஆனாலும் தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமையில் பேச்சுவார்த்தையின் முடிவில் உங்களுக்கு ஒரு நல்ல பொறுப்பு கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள்.

 

அவருக்கு தற்போது எம்.ஜி.ஆர். மன்றத்தில் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. பொறுப்பு அறிவித்த உடனே ஓ.பி.எஸ்.க்கும், எடப்பாடிக்கு போன் செய்து எனக்கு இந்த பொறுப்பு வகிக்க விருப்பம் இல்லை. என்று சொல்லிட்டாராம்.

 

கட்சியில் கிளை அணிக்கு தேவையில்லை. கட்சியில் எங்கள் சமூகத்தில் நான் தான் சீனியர் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்று மறுத்து விட்டாராம்.

 

இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அவரை பதவி விலக இபிஎஸ் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன் என அவர் மிரட்டியதால், பயந்து போன எடப்பாடி தற்போது அவருக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் திண்டாடி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது கட்சியினர் பதவிக்காக நெருக்கடி கொடுத்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!