அம்மா இருந்தவரை இந்த ஆட்டம் எங்க போச்சு!? விஜய் மேல் உக்கிரத்தில் இருக்கும் அதிமுக!!

By sathish kFirst Published Oct 4, 2018, 10:33 AM IST
Highlights

நேற்று முன் தினம் தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்த சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய  அரசியல் பேச்சு மெர்சலாக இருந்தது.

ஆமாம்!! ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை அடக்கியே வாசித்த இளையதளபதி விஜய், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். இளையதளபதி என்ற ஆடை மொழியை தளபதி என போட்டு திமுக தலைவர் ஸ்டாலினை சீன்டிப்பார்த்தார். 

தற்போது அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடந்த சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் முழுமையாக வெளிப்பட்டது.  திமுக குடும்பமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், அரசியலை மெர்சல் பண்ணியிருக்கோம் எனப் பேசினார். தொடர்ந்து அரசியலை பேசிய விஜய்,‘எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். 

நான் படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். மக்களுக்காக உண்மையாக உழைப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது சாதரணமான  விஷயமாக தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்துதான் ஆக வேண்டும் என அரசியல் நெடி அரங்கம் முழுவதும் வீசியது.

விஜயின் இந்த அரசியல் பேச்சு, திமுகவைவிட, அதிகமாக கட்டத்தில் இருப்பது என்னவோ அதிமுக தான். ஏற்கெனவே ஜெயலலிதா இருந்த சமயத்தில், தலைவா, கத்தி படத்துக்குச் சிக்கல் வந்தது. இப்போது அராசாங்கத்தைக்  தாறுமாறாக தாளித்து தள்ளியிருக்கிறார் விஜய். எப்போதுமே ஜெயகுமார் அமைதி காக்கவே, கடும் காட்டமான அமைச்சர் ஆர்பி உதயகுமார். இந்த சர்க்கஸ் காட்டுற வேலையை சினிமாவில் மட்டும் வச்சுக்கோங்க ‘நாங்க நாட்டை கவனமாகவும் பத்திரமாகவும் பார்த்துக்குறோம். அதுல நடிகர்களுக்கு எதுக்கு கவலை? எங்க வேலையை நாங்க பார்க்கிறோம். அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். நாங்க சரியாக இருக்கும்போது நடிகர்களுக்கு எதுக்கு முதல்வர் கனவு?’ என விஜய்யை விளாசித் தள்ளியிருந்தார்.

முதல்வர் எடப்பாடியாரோ, ‘விஜய்  பேசியதைப் பார்த்தால். பக்காவாக  பிளானோடுதான் பேசியிருக்காரு.  இப்போ விஜய்க்கும் அரசியல் ஆசை வந்துருச்சு. இப்போ தேவையில்லாமல்  படத்தை  தடுத்தால் அதுவே விஜய்க்கு பெரிய ப்ளஸ் ஆக மாறிவிடும், நாம கண்டுக்காம அமைதியாக இருக்கிறதுதான் நல்லது. இப்போ  அவர் கலாநிதி மாறன் பேனர்ல நடிப்பதால், பிரச்சனை அவங்களுக்கு தான். பொறுத்திருந்து பார்க்கலாம் என அமைச்சர்களுக்கு அட்வைஸ் பண்ணினாராம்.

click me!