பதறிப்போய் பாஜக அலுவலக கதவைத் தட்டிய அதிமுக...!! பகையை மறந்து பங்காளியான பாஜக...??

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2019, 3:40 PM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா. கிருஷ்ணனை நேரில் சந்தித்த அவர். கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுகவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரினார், அத்துடன் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள வேண்டும என்று கோரிக்கையுள்ளார்.

அதிமுக பாஜக இடையே கருத்து மொதல் இருந்து வந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பாஜக அலுவலகத்திற்கு சென்று இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம்  அதிமுக பாஜக கூட்டணி  மீண்டும் உறுதியாகி உள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான காங்கிரஸுக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, நாங்குநேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதில், அதிமுக -பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணி, இடைத்தேர்தலுக்கு முன்பே முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் பரவியது.

 

அதுதொடர்பாக, பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, "இடைத்தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், பாஜக தேசிய தலைமையே அது குறித்து முடிவெட்டுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் செய்தியாளர்களுக்கு  பேட்டி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி தொடரும்  என உறுதியாக கூறியிருந்தார். ஆனாலும் இரு கட்சிகளுக்கும் இடையே உறவில் விரிசல் இருந்தே வந்தது இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியுடும் அதிமுகவுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க கோரி  அமைச்சர் ஜெயக்குமார் பாஜக அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கோரிக்கை வைத்தார். 

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா. கிருஷ்ணனை நேரில் சந்தித்த அவர். கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுகவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரினார், அத்துடன் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள வேண்டும என்று கோரிக்கையுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அதிமுக பாஜக கூட்டணி நீடிப்பது உறுதியாகி உள்ளது. 

click me!