கிருஷ்ணசாமியை கூட்டு சேர்த்தா காலி ஆயிடுவோம்... சந்திச்சாலே தோத்துப்போயிடுவோம்!! சீண்ட கூட ஆளில்லாமல் கிடக்கும் பரிதாபம்!!

By sathish kFirst Published Sep 30, 2019, 11:44 AM IST
Highlights

டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக சார்பாக பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தால், தேவர் சமூக வாக்குகள் மொத்தமாக போயிடும்,  தமக்கு ஒரு ஓட்டுக்கூட விழாது என்று அதிமுக முடிவே பண்ணிவிட்டதாம். 

நடக்கவுள்ள நாங்குநேரி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பணபலம், படைபலம் , சாதி பலம் என ஒவ்வொன்றாக தட்டித் தூக்கி வருகிறது. ஆனால், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை சந்திக்கவும் இல்லை, சந்திக்கும் ஐடியாவையும் தூக்கி போட்டுள்ளனர். அதிமுக தங்களை சந்திக்கும் என காத்திருந்து தற்போது சீண்டக்கூட ஆளில்லாமல் சோகத்தில் இருக்கிறாராம் டாக்டர் கிருஷ்ணசாமி.

எங்களை சந்தித்து ஆதரவு கேட்டால் முடிவு செய்வோம் என்று  பிரேமலதா தூண்டில் போட்டதை அடுத்தே விஜயகாந்தை அமைச்சர்கள் கோஷ்டி வீடு தேடி போய் சந்தித்தது ஆதரவும் கேட்டது. அதேபோல பிஜேபியை பொறுத்தவரை ஆளுநராக இருக்கும் தமிழிசை தலைவராக இருந்தவரை சென்று சந்திப்பார்கள். இப்போது அவரும் இல்லாததால், தலைவர் என எவரும் இல்லாததால் யாரை சந்தித்து ஆதரவு கேட்பது என தெரியாமல் சைலன்ட் மோடில் இருக்கிறது.

இந்த வரிசையில் அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை  அதிமுக தலைவர்கள் தேடிச் சென்று சந்திக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் புதிய தமிழகம் என்ற ஒரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாது. தெரியாமல் கூட ஒரு ஒட்டு விழாது ஆனால் , தென் மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதி அப்படி இல்லை, தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு 10 சதவிகிதம் இருக்கிறது. ஆனால் அது கட்சி ஒட்டு என சொல்லிவிட முடியாது. வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய வாக்கு வங்கியாக தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள் இருந்தாலும். கிருஷ்ணசாமியை சந்திக்கவோ, வாக்கு சேகரிக்க அழைக்கவோ அதிமுக தயாராக இல்லை. வேட்பாளர்கள் அறிவித்தும் இன்னும் யாரும் ஆதரவு கேட்டு வராததால் கிருஷ்ணசாமி வருத்தத்தில் இருக்கிறார்.

இதற்கான காரணம் தான் கிருஷ்ணசாமிக்கு பயங்கர மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. நாங்குநேரியில் தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்துக்கு இணையாக தேவர் இன வாக்குகளும் இருக்கிறது. அமமுக இந்த முறை இல்லை. எனவே டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக சார்பாக பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தால், தேவர் சமூக வாக்குகள் மொத்தமாக போயிடும்,  தமக்கு ஒரு ஓட்டுக்கூட விழாது என்று அதிமுக முடிவே பண்ணிவிட்டதாம். இதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமியை அதிமுக தலைவர்கள் சும்மா பேச்சுக்கு கூட சந்திக்க விரும்பவில்லையாம்.

ஆனால், அவர்களின் வாக்குகளை லோக்கலில் உள்ள ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் என அங்குள்ளவர்களை வைத்து தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளை வாங்கிவிடலாம் கொள்ளலாம். நேரடியாக கிருஷ்ணசாமியை கூட்டு சேர்த்தால் முக்குலத்து வாக்கு மொத்தமா காங்கிரஸ் கைப்பற்றிவிடும் என்பதால் டாக்டர் கிருஷ்ணசாமியை கழட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.

click me!