அ.தி.மு.க. ஒண்ணும் எடப்பாடி, பன்னீர் குடும்ப சொத்து கிடையாது: தெறிக்கவிடும் சரசு...

By Vishnu PriyaFirst Published Feb 26, 2020, 6:08 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் படத்துல அப்பா ரஜினிகாந்த் இறந்ததும், பையன் ரஜினிகாந்த் அப்படியே முடியை சிலுப்பிட்டு எழுவார். அதுக்குப் பிறகு எதிர்தரப்புக்கு கஷ்டகாலம் கன்னாபின்னான்னு வந்து கூத்தடிக்கும். ஒருபக்கம் எதிரிகளை சுத்திவிட்டு, சூறையாடுற ரஜினி இன்னொரு பக்கம் ஹீரோயின் கூட செமத்தியா குஷியாவும் சுத்துவார்.

சூப்பர் ஸ்டார் படத்துல அப்பா ரஜினிகாந்த் இறந்ததும், பையன் ரஜினிகாந்த் அப்படியே முடியை சிலுப்பிட்டு எழுவார். அதுக்குப் பிறகு எதிர்தரப்புக்கு கஷ்டகாலம் கன்னாபின்னான்னு வந்து கூத்தடிக்கும். ஒருபக்கம் எதிரிகளை சுத்திவிட்டு, சூறையாடுற ரஜினி இன்னொரு பக்கம் ஹீரோயின் கூட செமத்தியா குஷியாவும் சுத்துவார். கிட்டத்தட்ட தினகரனிடம் இப்படியொரு ஆக்‌ஷன், ஆனந்தம் காம்போவைதான் எதிர்பார்த்தார்கள்  அ.தி.மு.க.வினர். அதனால்தான் அவரை நம்பிப் பெரியா பெரியா மனிதர்களும் கூட ஆளும் தரப்பில் இருந்து பிரிந்து, அ.ம.மு.க.வில் ஐக்கியமானார்கள். 

அதிலும் ஆர்.கே.நகரில் சிங்கிள் மேனாக  அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை தினகரன்  தனது சின்னமான குக்கரில் வைத்து அவித்து அனுப்பியபோது மிரண்டு, மெர்சலானார்கள் ஆளுங்கட்சி வி.வி.ஐ.பி.க்கள். சில அமைச்சர்களே கூட ‘பேசாம நாமளும் அந்த சைடு போயிடலாமா? ஆட்சியே அவரு கைக்கு போயிடும் போல இருக்குதே!’ என்று  டவுட்டில் அலைபாய்ந்தார்கள். ஆனால், ஆர்.கே.நகர்  தேர்தலுக்குப் பின் தினகரன் எந்த மேஜிக்கையும் நிகழ்த்தவேயில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அண்ணனுக்கு சறுக்கலோ சறுக்கல், செம்ம சறுக்கல். இந்த நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் தினகரன் ஏதாவது பெரிய அளவில் செய்தால் மட்டுமே அவருக்கு தமிழக அரசியலில் வாய்ப்பு. இல்லையென்றால் லெட்டர் பேடு கட்சியை விட நிலைமை மோசமாகிவிடும்! என்று அவரது கட்சியினரே ஓப்பனாக பேசுகிறார்கள். 

 

அந்த வகையில், சசி வெளியே வந்ததும் அ.தி.மு.க.வை அவர் வழி நடத்துவார்! அ.ம.மு.க.வை ஆளுங்கட்சியுடன் இணைப்பார்! என்றெல்லாம் தகவல்கள் தடதடக்கின்றன. இதெல்லாம் உண்மையா? என்று தினகரன் கட்சியின் கொ.ப.செ.வான சி.ஆர். சரஸ்வதியிடம் கேட்க, அவரோ “இத பாருங்க, நல்லா கேட்டுக்குங்க. அ.தி.மு.க. ஒண்ணும் இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்.ஸோட குடும்ப சொத்து கிடையாது. அது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் வழிநடத்தப்பட்ட இயக்கம். அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சட்டப்படியும், கட்சி விதிகளுக்கு ஏற்பவும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் சசிகலாதான். அவருக்குதான் அ.தி.மு.க.வில் எல்லா உரிமையும் உண்டு. 
ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியெல்லாம் அக்கட்சி விதிகளின் படி கிடையவே கிடையாது. 

எல்லா அதிகாரங்களும் பொதுச்செயலாளருக்குதான் உண்டு. அன்னைக்கு ஜெ., அணி மற்றும் ஜா., அணியை அம்மா இணைத்தது போல, சின்னம்மாவும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பார். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் அவரது கையில் வரணும்னு நாங்க பிரார்த்தனை பண்ணிட்டிருக்கோம். சின்னம்மாவின் கைகளுக்குள் அ.தி.மு.க. வந்தபிறகுதான் அ.ம.மு.க. அதில் இணையுமா?ன்னு தெரியவரும். அதையும் எங்க தலைவர் தினகரன் தான் சொல்லுவார்.” என்றிருக்கிறார். சி.ஆர்.சரஸ்வதியின் இந்த டயலாக்குகளைக் கேட்டு சிரிசிரியென சிரிக்கும் ஆளுங்கட்சியின் குறும்புப் பேர்வழிகள் சிலர் “சரசம்மா நீங்க நல்லாதான் பேசுறீங்க. ஆனா இதெல்லாம் சினிமா இல்லை, நிஜ அரசியல். உங்க டயலாக்கெல்லாம் இங்கே பலிக்காது.” என்று கலாய்த்திருக்கின்றனர். இப்படியே மாத்தி மாத்தி கலாய்ச்சுட்டே இருங்க!


 

click me!