டிடிவி.தினகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண்? - அதிமுக அலுவலகத்தில் நடந்தது என்ன?

Asianet News Tamil  
Published : Mar 10, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
டிடிவி.தினகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண்? - அதிமுக அலுவலகத்தில்  நடந்தது என்ன?

சுருக்கம்

admk female cader Fainted

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனிடம் நிதி உதவி பெறும் போது பெண் தொண்டர் ஒருவர் மயங்கி சரிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் உள்ளதால் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் பெண் ஒருவர் நலத்திட்ட உதவியைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் முன்பு வந்தார். அப்போது திடீரென அழத் தொடங்கிய அவர், சில நொடிகளிலேயே மயங்கி சரிந்து விழுந்தார்.

இதனைக் கண்டு டிடிவி அதிர்ச்சியடைந்தார். ஓடி வந்த அதிமுக நிர்வாகிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இச்சம்பவத்தினால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!