விநாயகர் சதுர்த்தி விழா.. ஹெச். ராஜா வருகையை எதிர்ப்பதில் கூட்டணி சேர்ந்த திமுக - அதிமுக... கடலூர் அருகே பரபரப்பு!

By Asianet TamilFirst Published Sep 1, 2019, 9:28 AM IST
Highlights

அரியநாச்சி கிராமத்தில் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருண்டுவருவதால், ஹெச்.ராஜாவின் வருகை தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், கட்சி வேறுபாட்டைத் தாண்டி போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க வர உள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு எதிராக திமுக, அதிமுக பெயரில் ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அரியநாச்சி கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. சேதமடைந்த அந்த கோயிலில் திருப்பணி செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
இந்நிலையில் அரியநாச்சி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது, ஹெச்.ராஜாவை வரவேற்று அரியநாச்சி கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வருகை தர உள்ள ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதிமுக பெயரில் அரியநாச்சி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியநாச்சி கிராமத்தில் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருண்டுவருவதால், ஹெச்.ராஜாவின் வருகை தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், கட்சி வேறுபாட்டைத் தாண்டி போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரியநாச்சி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!