தனிக்காட்டு ராஜா அதிமுக..!! ஸ்டாலினை துவம்சம் செய்தார் எடப்பாடி...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 24, 2019, 10:54 AM IST
Highlights

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது, அதிமுக  வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 7-வது சுற்றில் 40 ஆயிரத்து 154 வாக்குகளைப் பெற்று உள்ளார்.  திமுக வேட்பாளர் புகழேந்தி 24 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்றுள்ளார்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது, அதிமுக  வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 7-வது சுற்றில் 40 ஆயிரத்து 154 வாக்குகளைப் பெற்று உள்ளார்.  திமுக வேட்பாளர் புகழேந்தி 24 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 982 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக வேட்பாளர் நாராயணன்,9 , 381 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்,  9,348 வாக்குகள் பெற்றுள்ளார் அதில் கிட்டதட்ட அதிமுக வேட்பாளர்நாராயணன் 3.033 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் நாம் தமிழர் கட்சி வெறும் 274 வாக்குகள் பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுகவின் புகழேந்தி, நாம் தமிழர் கட்சியின் கந்தசாமி உட்பட 12 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளான 2,33,387 வாக்குகளில், 1,88,659 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மொத்தம் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை, அதிமுக சார்பில் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன் உட்பட 23 பேர் போட்டியிட்டனர்.

 

இந்த தொகுதியில் 2,56,414 வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 1,70,624 பேர் மட்டுமே வாக்களித்தனர். கடந்த பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் 71 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், தற்போது 66.35 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு தொகுதிகளிலும் சுமார் அரைமணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில் இவ்விரண்டு தொகுதிகளிலும் தொடக்கத்திலிருந்தே அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகின்றனர். 

click me!