உள்ளாட்சி தேர்தல்.. படு ஸ்பீடில் அதிமுக.. வெளியான பக்கா வேட்பாளர் பட்டியல்..

Published : Sep 20, 2021, 09:09 PM IST
உள்ளாட்சி தேர்தல்.. படு ஸ்பீடில் அதிமுக.. வெளியான பக்கா வேட்பாளர் பட்டியல்..

சுருக்கம்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை இன்று அறிவித்து உள்ளது.

 

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை இன்று அறிவித்து உள்ளது.

அண்மையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று அறிவித்தது.

தேர்தல் நடைபெறும் 9 மாதங்களிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிலையில் தற்போது அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன்படி விழுப்புரத்தில் 24 மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் பெயர்கள், காஞ்சிபுரத்தில் 11, செங்கல்பட்டில் 14 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டையில் 9, தென்காசியில் 12 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!