ரஜினியும், கமலும் அரசியலில் தேறுவார்களா?... லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி என்ன சொல்கிறார்

By vinoth kumarFirst Published Nov 27, 2018, 9:51 AM IST
Highlights

’தமிழக மக்களிடம் சினிமா நடிகர்கள் என்கிற இமேஜிலிருந்து அரசியல்வாதிகள் அந்தஸ்துக்கு உயரவேண்டுமெனில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்கவேண்டும்’ என்று ‘நீங்க இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பிகளா’ என்பதுபோல்,  ஒரு மூத்த அரசியல்வாதியாக அட்வைஸ் வழங்கியிருக்கிறார் முன்னாள் தென்னிந்திய லேடி சூப்பர்ஸ்டாரும் இந்நாள் அரசியல்வாதியுமான விஜயசாந்தி.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது சினிமா மார்க்கெட் டல்லடிக்கத் துவங்கியபோது பாரதிய ஜனதாவில் எண்ட்ரி கொடுத்து தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக வலம் வரும் விஜயசாந்தி கமலுடன் ‘இந்திரடு சந்திரடு’ என்கிற தெலுங்குப் படத்திலும், ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’, ‘மன்னன்’ ஆகிய இரு படங்களிலும் மட்டுமே நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜயசாந்தியிடம் கமல், ரஜினி ஆகியோர் தமிழக அரசியலில் எடுபடுவார்களா என்று நிருபர்கள் கேட்டபோது, ’’அவர்கள் இருவரும் அரசியலுக்கு வருவதை வாழ்த்தி வரவேற்கிறேன். ஆனால் திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அவ்வளவு எளிதானதல்ல அரசியல். நான் அரசியலுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிறது. தெலங்கானாவுக்காக தொடர்ந்து  இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன். இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. எனவே ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் அவர்களுடனேயே  இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். அவ்வாறு நின்றால்தான் அவர்களால் அரசியலில் தாக்குப்பிடிக்கமுடியும்’’ என்றார்.

click me!