ஆசை வார்த்தை கூறி சாந்தினியுடன் ஆசை தீர உல்லாசம்... 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவரை விசாரிக்க முடிவு..!

Published : Jun 01, 2021, 03:41 PM IST
ஆசை வார்த்தை கூறி சாந்தினியுடன் ஆசை தீர உல்லாசம்... 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவரை விசாரிக்க முடிவு..!

சுருக்கம்

முன்னாள்  அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகைக்கு 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள்  அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகைக்கு 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசிய குடியுரிமை பெற்ற இவர், மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் அவரது நண்பர் பரணி என்பவர் மூலம் நடிகைக்கு நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். முதலில் அமைச்சரின் ஆசைவார்த்தையை ஏற்க மறுத்த நடிகை பிறகு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன் பிறகு பெசன்ட் நகர் மதுரிதா அப்பார்ட்மென்டில் மணிகண்டன் மற்றும் நடிகை சாந்தினி ஆகியோர் கணவன், மனைவி போல் வசித்து வந்துள்ளனர். மேலும், மணிகண்டன் சென்னையில் இருக்கும் போது நடிகை வீட்டில்தான் தங்குவார். இதனால் நடிகை 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன் பலமுறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பாக சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரை விசாரித்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் , பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது கைது நடவடிக்கை பயந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்த மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிற காரணத்தினால், அவர் மீது போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான தகுந்த ஆதாரங்களை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர். நடிகை சாந்தினிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் யார் என்பதை காவல் துறையினர் கண்டறிந்து அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?