அஜித்துக்கு முன்னாடி விஜய் ஒன்னுமே இல்லை..!! பயங்கர டேமேஜ் செய்த அந்த தலைவர்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2019, 7:36 AM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதி இருந்த மேடையிலேயே அஜித் எழுந்து  தைரியமாக நடிகர்களை வற்புறுத்தி நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்று அப்போதே கெத்துகாட்டிய அஜித் எங்கே, தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்த விஜய் எங்கே.? 

நடிகர் அஜித்துக்கு முன்னாடி விஜய் எல்லாம் ஒரு ஆளே கிடையாதுங்க என இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர் ராம ரவிக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி  கொடுத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், ஒரு நடிகர் என்றால் ரசிகர்களை ஒழுங்குபடுத்த வேண்டும், அந்த வேலையை சரியாக செய்பவர் அஜித் மட்டும் தான்.  இதுவரையில் தனக்காக ரசிகர் மன்றம் வைக்க வேண்டும் என்று அஜித் அவர்கள் அவரது ரசிகர்களுக்கு சொன்னதே இல்லை... ஆனால் விஜய் அப்படியா.?  நடிகர் அஜித் ஈடுஇணையற்ற கதாநாயகனாக உள்ளார். அஜித் லெவலுக்கு விஜய் இல்லை எனபதுபோல் கருத்து கூறியுள்ளார். அத்துடன்  "சூரியனுக்கே போக்கஸ் லைட் போட முடியுமா" அப்படித்தான் அஜித் என்ற ராம ரவிக்குமார், அஜித்தால் இந்த சமூகத்திற்கு  எந்த பிரச்சினையும் வந்ததில்லை ஆனால் விஜய்யை அப்படி சொல்ல முடியுமா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் கிருத்தவர் என்பதால் அவரை எதிர்க்கிறீர்கள்.? அஜித் இந்து என்பதால் அவரை ஆதரிக்கிறீர்களா என்று செய்தியாளர் கேட்டதற்கு,  அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த சமூகத்திற்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் ஆதரவும் எதிர்ப்பும் என தெரிவித்துள்ளார். அத்துடன் அஜீத்துக்கு இணையான நடிகராக விஜய் இருக்கிறார் என்று கேட்டதற்கு,  அஜித்துக்கு இணையாகவெல்லாம் விஜய் இல்லை,

 

திமுக தலைவர் கருணாநிதி இருந்த மேடையிலேயே அஜித் எழுந்து  தைரியமாக நடிகர்களை வற்புறுத்தி நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்று அப்போதே கெத்துகாட்டிய அஜித் எங்கே, தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்த விஜய் எங்கே.? ஜெயலலிதா இருந்தபோது வாலை சுருட்டி கொண்டு இருந்த விஜய் இப்போது அரசியல் பேசுகிறார் என சரமாரியாக விஜய்யை டேமேஜ் செய்திருக்கிறார் ஆவர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!