நீயெல்லாம் ஒரு மனுஷனா ? எச்.ராஜாவை கழுவி ஊற்றிய நடிகர் சித்தார்த் !!

Published : Sep 17, 2018, 05:36 AM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
நீயெல்லாம் ஒரு மனுஷனா ?  எச்.ராஜாவை கழுவி ஊற்றிய நடிகர் சித்தார்த் !!

சுருக்கம்

இந்துத்துவா என்ற பெயரில் எச்.ராஜா பேசிய பேச்சுக்கள் பெரும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நடிகர் சித்தார்த், நீதிமன்றமும், போலீசாரும் இதை ஏன் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, மெய்யபுரத்தில் விநாயர் ஊர்வலம் குறிப்பிட்ட வழியில் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக கூறி காவல் துறையினர் அவ்வழியே செல்ல மறுப்புத் தெரிவித்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  போலீஸாரை விமர்சித்ததோடு, உயர்நீதிமன்றத்தையும் சில மோசமான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதையடுத்து எச்.ராஜா மீது  புதுக்கோட்டை போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எச்,ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எச். ராஜாவின் இந்த மோசமான செயலை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத் தள்ளும் தமிழக போலீஸார், உயர்நீதிமன்றம், போலீஸார், சிறுபான்மையினர் குறித்து  எச்.ராஜா போன்றோரின் மிரட்டல் தொனி, மோசமான வார்த்தைகளால் பேசுவதை வேடிக்கப் பார்ப்பதாக விமர்சித்துள்ளார். இந்துத்துவம் என்ற பெயரில் இவர் செய்வது சரியா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?