பாஜக கட்சியில் இணைந்தார் நடிகர் ராதாரவி..!

By manimegalai aFirst Published Nov 30, 2019, 11:56 AM IST
Highlights

தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு 'மன்மத லீலை' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் ராதா ரவி. 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
 

தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு 'மன்மத லீலை' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் ராதா ரவி. 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் சீரியல்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். திரையுலகை தாண்டி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவருக்கு முதல் தாய் வீடு என்றால் திமுக கட்சி தான். 

அதன் பின், ஒரு சில காரணங்களால் அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுக கட்சியில் இணைந்து, சைதப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், ஆளும்கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்களால் மீண்டும் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக கட்சியில் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம், நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் இவர் பேசியது மிக பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதனால் அந்த கட்சியில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின் மீண்டும் தற்போது அதிமுக கட்சியில் இணைந்திருக்கிறார். மேலும் பாஜக கட்சிக்கும் தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் விதத்தில், தற்போது சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் ராதாரவி. 

click me!