கருணாசை கூவத்தூரிலேயே விட்டுட்டு வந்திருக்கணும்...!! கொந்தளிக்கும் எஸ்.வி சேகர்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2020, 5:57 PM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்... கருணாஸ் பேட்டி... அன்னிக்கே கூவத்தூரில் விட்டுட்டு வந்து இருந்தா இந்த அபத்த பேச்சை கேட்டு இருக்க வேண்டிய அவசியம் இருக்காது 

அன்றே கூவத்தூரில் விட்டுட்டு வந்திருந்தா இந்த அபத்த பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என முக்குளத்தோர் புலிப்படையின் சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாசை , நடிகரும் அரசியல்வாதியுமான  எஸ். வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார் .  இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது .  கேரளா மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் .  இந்நிலையில் அதேபோன்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. 

இந்நிலையில் 15வது தமிழக சட்டப்பேரவையில் எட்டாவது கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது ,  ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார் அப்போது குடியுரிமை சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு செய்தது .  அதைத்தொடர்ந்து  டிடிவி தினகரன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் அதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர் .  இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முக்குலத்தோர் புலிப்படையின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் குடியுரிமை திருத்த மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வெளிநடப்பு செய்தார். 

இந்நிலையில் கருணாஸ் வெளிநடப்பு செய்தது குறித்து  நடிகரும் அரசியல்வாதியுமான எஸ். வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார் அதில் முக்குலத்தோர் புலிப்படை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வெளிநடப்பு... குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்... கருணாஸ் பேட்டி... அன்னிக்கே கூவத்தூரில் விட்டுட்டு வந்து இருந்தா இந்த அபத்த பேச்சை கேட்டு இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என கருணாசை  தன்னுடைய வழக்கமான பாணியில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

click me!