அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... 13 ம் தேதி முதல் ஆரம்பம்..!

Published : Jul 08, 2020, 11:22 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... 13 ம் தேதி முதல் ஆரம்பம்..!

சுருக்கம்

அரசு பள்ளிகளில் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.   

அரசு பள்ளிகளில் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பல்வேறு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.


 
இந்நிலையில் அரசு பள்ளிகளில் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ’’தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களின் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கு இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!