ஸ்டாலினும், இம்ரான்கானும் மோடி பார்வையில் ஒன்றுதான்: தி.மு.க.வுக்கு எதிராக கத்தி தீட்டும் பாரதிய ஜனதா

By Vishnu PriyaFirst Published Oct 5, 2019, 5:18 PM IST
Highlights

எப்படி மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக இம்ரான் பேசுகிறாரோ, அதைத்தான் ஸ்டாலினும் பேசுகிறார். இவரது செயல் அரசுக்கு எதிராக வன்மத்தை மக்கள் மனதில் திணிப்பதாக எங்கள் தலைமை நினைக்கிறது. இதனால்தான் மோடி மற்றும் அமித்ஷாவின் பார்வையில் ஸ்டாலினும், இம்ரான்கானும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம், தமிழகத்தில் ஹிந்தி மொழி ஆகிய விவகாரங்களில் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் நடத்திய போராட்டங்களும், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய ஆலோசனைகளும், மீடியா மற்றும் பொது மேடைகளில் பேசிய பேச்சுகளும் மிக முழுமையாக மோடியை ஆத்திரப்படுத்தி இருக்கிறது. இதனால்தான் ‘ப.சிதம்பரத்துக்கு அடுத்து ஸ்டாலின்!’ எனும் தீயை பா.ஜ. பற்ற வைத்திருக்கிறது. ஆம் ஸ்டாலினுக்கு எதிராக முழுமையான நெருக்கடியை தந்துவிடும் நோக்கத்திலேயே  அக்கட்சியின் தலைமை இருப்பதாக அதன் நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர். 

மோடி, அமித்ஷவுக்கு ஏன் ஸ்டாலின் மீது இவ்வளவு கோபம்? எனும் கேள்விக்கு பதில் தருபவர்கள்....“இந்த கோபத்தை உருவாக்கியதே ஸ்டாலின் தான். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு தமிழகத்தில்  இருந்து மட்டும்தான் அதிகப்படியான எதிர்ப்பு மத்திய அரசுக்கு எதிராக வந்தது. மற்ற மாநிலங்களில் இவ்வளவு துள்ளல்கள் இல்லை. வட மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கூட இந்த ரத்தை வரவேற்றனர். ஆனால் ஸ்டாலின் ஏனோ விடாப்பிடியாக போராட்டத்தை தூண்டிக் கொண்டே இருந்தார். இதை பாகிஸ்தான் தங்களுக்கான ஆதரவாக பார்த்தது. 

ஸ்டாலின் யார்? அக்கட்சியின் ப்ரொஃபைல் என்ன? அக்கட்சி  இஸ்லாமியர்களுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறது? என்பதையெல்லாம் இம்ராக் கேட்டு தெரிந்திருக்கிறார். அதனால்தான் தி.மு.க.வின் டெல்லி போராட்டமானது பாகிஸ்தான் நாட்டு வானொலியிலும், டி.வி.சேனல்களிலும் தலைப்பு செய்திகளில் ஒன்றானது. 
இம்ரான்கானே தனது பேச்சின் போது தி.மு.க.வின் போராட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். இம்ரானோடு ஸ்டாலினுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ‘மோடி எதிர்ப்பு’ எனும் கருத்தியல் ரீதியில் இருவரும் ஒரே நேர்கோட்டில் வருகின்றனர். 

எப்படி மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக இம்ரான் பேசுகிறாரோ, அதைத்தான் ஸ்டாலினும் பேசுகிறார். இவரது செயல் அரசுக்கு எதிராக வன்மத்தை மக்கள் மனதில் திணிப்பதாக எங்கள் தலைமை நினைக்கிறது. இதனால்தான் மோடி மற்றும் அமித்ஷாவின் பார்வையில் ஸ்டாலினும், இம்ரான்கானும் ஒன்றாகவே இருக்கின்றனர். 
இதன் விளைவுகளால்தான் ஸ்டாலினுக்கு எதிரான நெருக்கடிகள் துளிர்விட துவங்கியுள்ளன.” என்கிறார்கள். 
கவனிப்போம்!

click me!