இந்தவாட்டி மிஸ்ஸாகக்கூடாது... அசால்ட்டா தட்டித் தூக்கணும்!! மீண்டும் ஆதிசேஷன் அவதாரம் எடுக்கும் ஏசி சண்முகம்...

By sathish kFirst Published Jul 4, 2019, 2:35 PM IST
Highlights

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் உற்சாகம் அடைந்துள்ள ஏசிஎஸ், இந்தவாட்டி ஜெயிக்கப்போவது நாம் தான் என குஷியில் உள்ளாராம், காரணம் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி மீண்டும் அமைந்ததால் செம குஷியில் உள்ளாராம் ஏசி சண்முகம், அதாவது ஏற்கனவே வாரி இறைத்த பணமும், தனது நெருங்கிய நண்பர் ரஜினியின் மறைமுக ஆதரவும், பிஜேபியின் மற்றும் அதிமுக ஆதரவும் இருப்பதால் நிச்சயம் வென்றுவிடுவோம் என ஏக போக எதிர்பார்ப்பில் உள்ளாராம்.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்கம் வேகாத வெயிலில் தொகுதி முழுவதும் தீயாக பிரசாரம் செய்து வந்தார்.  பணபலமும், களப்பணியாற்றுவதிலும் வல்லவரான ஏ.சி. சண்முகம் அதிமுக வேட்பாளர் பி. செங்குட்டுவனிடம் தோல்வியடைந்தார். செங்குட்டுவன் 387719 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  ஏ.சி. சண்முகம் 324326 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவினார். 

கடந்த 2014ல் நடந்த தேர்தலில் சுமார் 50 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவிய ஏசி சண்முகம், இந்தமுறை அதிமுக, பாமக, பிஜேபி, தேமுதிக போன்ற கட்சிகளின் பலத்தோடு இரட்டை இல்லை சின்னத்தில் அதே வேலூரில் களம் கண்டார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் நிற்கிறார்.  இவரை எதிர்த்து அதிமுகவின் இரட்டை இலை  சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். சொந்த கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் தேர்தல் செலவுக்காக வாரி தந்தார் கதிர்ஆனந்த்.  அதுமட்டுமல்ல அதிக வாக்குகள் வாங்கி தரும் தொகுதி நிர்வாகிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என ஏசி சண்முகம் அறிவிக்க, 50 லட்சம் பரிசு என போட்டிக்கு துரைமுருகணும் சொல்ல மோப்பம் பிடித்த ஐடி கதிர்ஆனந்த் வீட்டில் ரெய்டு நடத்தி செய்து 10 லட்சம் பறிமுதல் செய்தது. ஆதரவாளர் வீட்டில் 11 கோடி ரூபாய் பணத்தினை பிடித்தது. இருவரும் மாறி மாறி ஆஃபறை அல்லி வீச   பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை  செய்தது, இதனை ஏற்று தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்முறை 50 கோடி ரூபாய் வரை செலவு செய்து அதாவது ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என பண விநியோகம் செய்து தொற்றுள்ள ஏசி சண்முகம் இந்தமுறை எப்படியாவது ஜெயித்துவிடலாம் என கனவு கண்டுகொண்டிருந்தார். ஆனால் துரைமுருகனும், அவரது மகனும் செய்து வைத்தவேலையால் 100 கோடி பணம் என மொத்தமாக பறிபோன சோகத்தில் இருந்தால் ஏசி சண்முகம். ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்த மனுஷன், எம்பி ஆகும் ஆசையில், வேகாத வெய்யிலில் தலையில் குல்லா கூட போடாமல் பிரசார வாகனத்தில் நின்றுகொண்டு சுற்றி சுற்றி ஓட்டு கேட்டும், சுமார் 100 கோடிக்கு மேல் செலவு செய்தும் ஒரு புரியோஜனமும் இல்லாமல் ஆக்கிய துரைமுருகன் மற்றும் கதிர்ஆனந்த் மீது செம்ம காண்டில் இருந்தார் ஏசி சண்முகம்.  

பணபலம், சொந்த செல்வாக்கு, கூட்டணி கட்சிகளின் வாக்குவங்கி, ரஜினியின் மறைமுக ஆதரவு என பலம் பொருந்தி எப்படியும் ஜெயித்துவிடுவோம் என கனவில் இருந்த ஏசி சண்முகத்துக்கு தேர்தல் ரத்தம், கோர்ட்டின் அதிரடி தீர்ப்பும் தேர்தலில் நிற்கும் ஆசையே போன நிலையில் காணப்பட்டார் ஏசி சண்முகம்.

இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியான சமயத்தில் அதிமுக - பிஜேபி கூட்டணி மண்ணைக் கவ்வியதால் அப்பாடா எப்படியோ தேர்தல் ரத்தாகாமல் இருந்திருந்தால் மரண அடி நமக்கும் கிடைத்திருக்கும் என பெரு மூச்சு விட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 19ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22ஆம் தேதி கடைசி நாள். ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் உற்சாகம் அடைந்துள்ள ஏசிஎஸ், இந்தவாட்டி ஜெயிக்கப்போவது நாம் தான் என குஷியில் உள்ளாராம், காரணம் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி மீண்டும் அமைந்ததால் செம குஷியில் உள்ளாராம் ஏசி சண்முகம், அதாவது ஏற்கனவே வாரி இறைத்த பணமும், தனது நெருங்கிய நண்பர் ரஜினியின் மறைமுக ஆதரவும், பிஜேபியின் மற்றும் அதிமுக ஆதரவும் இருப்பதால் நிச்சயம் வென்றுவிடுவோம் என ஏக போக எதிர்பார்ப்பில் உள்ளாராம்.

click me!