மதுரை அகதிகளுக்கு உதவிய நடிகர் அபிசரவணன்.!!

By Thiraviaraj RMFirst Published May 4, 2020, 9:19 PM IST
Highlights

 நடிகர் அபி சரவணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்.மதுரையில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு உதவி இருக்கிறார்.

T.Balamurukan

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மாநிலம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உள்ளது. மேலும், ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட ஊரடங்கை அறிவித்து உள்ளது.இதனால் மக்கள் வீட்டிற்குள் வருமானம் இன்றி முடங்கி இருக்கிறார்கள்.சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். அரசாங்கம் கொடுத்த ரு1000 அரிசி,பருப்பு,ஆயில் மட்டுமே கொடுத்து விட்டு மக்களை வீட்டிற்குள் முடக்கியிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அபி சரவணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்.மதுரையில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு உதவி இருக்கிறார். அங்கு இருக்கும் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 1300 நபர்களுக்கும், மதுரையில் இருக்கும் 300 குடும்பங்களுக்கும் 1 வாரத்திற்கு தேவையான 13 வகையான காய்கறிகள் மற்றும் அரிசிகளை நண்பர்கள் உதவியுடன் வழங்கியிருக்கிறார். திருநங்கைகள் 50 பேருக்கும், நெசவாளர்கள் 50 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவைகளை கொடுத்திருக்கிறார்.

click me!