#BREAKING என்ன வாய்க்கொழுப்பு பேச்சு.. ஆ.ராசாவுக்கு சரியான ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்.. அதிர்ச்சியில் திமுக.!

Published : Apr 01, 2021, 02:51 PM ISTUpdated : Apr 01, 2021, 03:03 PM IST
#BREAKING என்ன வாய்க்கொழுப்பு பேச்சு.. ஆ.ராசாவுக்கு சரியான ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்.. அதிர்ச்சியில் திமுக.!

சுருக்கம்

முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அக்கட்சியினர் அளித்த புகாரின் பேரில் ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடமும் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தனது பேச்சு முதலமைச்சரை காயப்படுத்தியதாக கருதினால், மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்திருந்தார். இதனிடையே ஆ.ராசாவுக்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம் அளித்தார். அதில் தனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. ஆகையால்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆ.ராசாவுக்கு தடை விதிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் அவரை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!