சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு தனிக்கட்சி…. தொண்டர்களோடு அதிமுகவை கைப்பற்ற புது பிளான் ரெடி !!

 
Published : Feb 05, 2018, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
சசிகலாவை கழற்றிவிட்டுவிட்டு தனிக்கட்சி…. தொண்டர்களோடு அதிமுகவை கைப்பற்ற புது பிளான் ரெடி !!

சுருக்கம்

A New party without sasikala.ttv dinakaran plan

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு தனிக்கட்சி தொடங்கவும், அதிமுக தொண்டர்களை சிந்தாமல் சிதறாமல் தனது தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து கைப்பற்றவும் டி.டி.வி.தினகரன் புது திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு பாதகமாக வந்தால் உச்சநீதிமன்றத்தை அணுகி கொஞ்ச நாட்களை கடத்துவதுதான் அவர்களது திட்டம். அது இல்லையென்றால் டி.டி.வி.தினகரனை தவிர்த்துவிட்டு சசிகலா குடும்பத்தினரை ஒருங்கிணைத்து அவர்களுடன் சமரசமாகி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கு சசிகலா  சம்மதிக்காவிட்டாலும் திவாரன் உள்ளிட்ட தினகரன் மேல் அதிருப்தியில் இருக்கும் குரூப், அவரை வற்புறுத்தி இசைவைப் பெற்று விடுவார்களோ என பயம் தினகரனை தற்போது தொற்றிக் கொண்டிருக்கிறது.

இதனால், அதிருப்தி அடைந்துள்ள தினகரன், தனக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் சிலருடன், சசிகலாவை தவிர்த்து விட்டு, புதுக்கட்சியை துவக்கலாமா என, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

புதுக்கட்சி தொடங்க  தினகரன் திட்டமிட்டிருந்தாலும், தற்போதைக்கு, அதற்கு உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் ஏதுமில்லை என்றும், . தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து பூத் கமிட்டிகளிலும், வாக்காளர் அட்டையுடன் கூடிய தலா 25 உறுப்பினர்களை தேர்வு செய்து வருவதாகவும் தெரிகிறது.

இதன்மூலம் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 300 பேர் குழுக்களை அமைக்க உள்ளதாகவும் தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், குறைந்தபட்சம், 250 பூத் கமிட்டிகளை உருவாக்கவும்,  ஒவ்வொரு பூத்திற்கும், 300 பேர் குழு என்றால், அவர்கள் வாயிலாக, தொகுதிக்கு, 75 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், தினகரன் புதுக்கட்சி துவக்கும் போது, சசிகலாவின் பெயரை சொல்லி ஓட்டுக்கேட்கவோ, அரசியல் நடத்தவோ முடியாது.

அதனால், புதிய கட்சியில், சசிகலாவின் பங்களிப்பு எதுவும் இருக்காது. அவரின் பெயரையும், தினகரன் பயன்படுத்தமாட்டார். அத்துடன், சசிகலா குடும்ப உறுப்பினர்கள் எவரது தலையீடும், கட்சியில் இருக்காது. தனிக்காட்டு ராஜாவாக வலம் வரலாம் என்பதே டி.டி.வி.தினகரனின் செம பிளான்  என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். ஒர்க்அவுட் ஆகுமா ?

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!