அமைச்சர் ஜெயக்குமாருக்கே ஜெர்க் கொடுத்த மீடியாக்கள்: பேனர் விஷயத்தில் பேய்த்தனமான ஸ்டேட்மெண்ட்! கொதிக்கும் அமைச்சர்.

By Vishnu PriyaFirst Published Oct 2, 2019, 5:29 PM IST
Highlights

அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ போன்றவர்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமலும், தவறாகவும், பின் முன் விளைவுகளை சிந்திக்காமலும் போட்டுத் தாக்குகின்றார்கள் என விமர்சனங்கள் வெடிக்கின்றன. 

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் கன்னாபின்னாவென ஓப்பன் ஆன தமிழக மந்திரிமார்கள், சில எம்.எல்.ஏ.க்களின் வாய் இதோ இன்று வரை மூடிக் கொள்ளவில்லை. பல விஷயங்களில் ஆளாளுக்குப் போட்டுப் பொளக்கிறார்கள் பேட்டியை. தாறுமாறு தக்காளி சோறாக வந்து விழும் இவர்களின் கருத்துக்களைப் பார்த்து தமிழ மக்கள் திக்கித் திணறுகிறார்கள்.


அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ போன்றவர்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமலும், தவறாகவும், பின் முன் விளைவுகளை சிந்திக்காமலும் போட்டுத் தாக்குகின்றார்கள் என விமர்சனங்கள் வெடிக்கின்றன. அமைச்சர் ஜெயக்குமாரும் ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட் பேர்வழிதான். ஆனால் அவரது பேச்சுக்கள் எப்பாடுபட்டாவது அ.தி.மு.க. அரசை காப்பாற்றுவதாகவும், ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி புள்ளிகளுக்கு செம்ம ரிவிட் வைப்பதாகவும் இருக்கின்றன என்பதே அ.தி.மு.க.வினரின் எண்ணம். 


எதிர்க்கட்சிகளை தன் ஸ்டேட்மெண்டுகளின் மூலம் தெறிக்கவிடும் ஜெயக்குமாரையே சமீபத்தில் ஒரு ஸ்டேட்மெண்ட் தெறிக்கவிட்டது. அது, சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் இறந்த விவகாரத்தில் ‘நூறு பேனர் வைத்தால் ஒன்று விழத்தான் செய்யும்’ என்று அமைச்சர் சொல்லியதாக பரவிய தகவலதான். 
இதைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டார் அமைச்சர். காரணம்? அவர் அப்படியொரு அலட்சிய ஸ்டேட்மெண்டை சொல்லவேயில்லையாம். எனவே தான் கூறியதாக இப்படியொரு பொய் ஸ்டேட்மெண்டை பரப்பும் மீடியாக்களின் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர இருக்கிறாராம் அமைச்சர். 
“எனக்கு மனிதநேயம் நிறைய உள்ளது. உயிரிழப்பு விஷயத்தில் அப்படி அலட்சியமாக பேட்டி கொடுப்பேனா?” என்று பொங்குகிறாராம். 
சர்தான். 

click me!