தமிழக இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள்... அதிமுக ஆட்சியைத் தக்க வைத்து கொள்ளுமா?

By Asianet TamilFirst Published Apr 19, 2019, 7:53 AM IST
Highlights

இந்த இடைத்தேர்தலில் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து அதிமுக 9 தொகுதிகளில் உறுதியாக வெல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதேபோல 20 தொகுதிகளில் எப்படியும் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று திமுகவும் தேர்தலில் முனைப்பு காட்டியது. எனவே அடுத்த இரண்டு கால ஆட்சி யாருக்கு என்பதை நிரூபிக்கப் போகும் இடைத்தேர்தலில் மக்கள் 71.62 சதவீதம் வாக்களித்துள்ளர்.  
 
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 86.96 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 18 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொகுதி வாரியாக வாக்குப்பதி விவரம்:
1. பூந்தமல்லி        79.14%,
2. பெரம்பூர்         61.06%,
3. திருப்போரூர்         81.05%,
4. சோளிங்கர்         79.63%,
5. குடியாத்தம்         81.79%,
6. ஆம்பூர்         76.35%,
7. ஓசூர்             71.29%,
8. பாப்பிரெட்டிபட்டி     83.31%,
9. அரூர்             86.96%,
10. நிலக்கோட்டை     85.50%,

11. தஞ்சாவூர்         66.10%,
12. மானாமதுரை     71.22%,
13. ஆண்டிப்பட்டி     75.19%,
14. பெரியகுளம்         64.89%,
15. சாத்தூர்         74.45%
16. பரமக்குடி         71.69%,
17. விளாத்திகுளம்     78.06%.
18. திருவாரூர்         77.38%

click me!