சமூக நீதியை நிலை நாட்டி இருக்கிறார் பினராயி...! - வைகோ புகழாரம்...!

 
Published : Oct 09, 2017, 07:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
சமூக நீதியை நிலை நாட்டி இருக்கிறார் பினராயி...! - வைகோ புகழாரம்...!

சுருக்கம்

62 people have been nominated by the Brahmins and 36 non-Brahmins.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். 

மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதியர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில் அர்ச்சகர்களாக தேர்வு செய்துள்ளது கேரள அரசு. 

இதில் 26 பேர் பிராமணர்களையும் பிராமணர் அல்லாதோர் 36 பேரையும் சேர்த்து 62 பேர் நியமனம் செய்துள்ளனர். 

இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேரையும் தேர்வு செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கையில், தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் வைக்கத்தில் போராடி வெற்றி கண்டதாகவும், அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அவருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கேரளாவில் வெற்றி பெற்ற பெரியாரின் கனவு அவர் பிறந்த தமிழகத்தில் ஈட்ட முடியவில்லையே என வருத்தம் தெரிவித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு