6.5 அடி கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மம்தா.! எழுத்தாணியுடன் அமர்ந்தவாறு காட்சி..!

By ezhil mozhiFirst Published Aug 7, 2019, 5:38 PM IST
Highlights

கலைஞர் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி, திக தலைவர் கி வீரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

கலைஞர் கருணாநிதி இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு  பெற்றதையொட்டி,கலைஞரின் சிலையை சென்னை  கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

கலைஞர் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைத்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி, திக தலைவர் கி வீரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

6.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் கலைஞர். இந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து திமுக நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும், கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கும் கி.வீரமணி தலைமை தாங்கி தலைமை உரையாற்றுகிறார். ‘முரசொலி’ ஆசிரியர் செல்வம் வரவேற்புரை வழங்குகிறார். மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழாவின் நிறைவாக, மு.க.ஸ்டாலின் நன்றியுரை ஆற்றுகிறார். 

click me!