திமுக முக்கிய நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

Published : Mar 17, 2022, 09:40 AM IST
திமுக முக்கிய நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

சுருக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் செயலாளர் பி.மாதேவ் ஆகியோரையும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவு  பிறப்பித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!
'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?