தமிழகத்தில் போட்டியிடும் 5 பாஜக வேட்பாளர்கள் இவர்கள் தான்…. வெளியான புதிய தகவல் !!

Published : Mar 20, 2019, 07:59 PM ISTUpdated : Mar 21, 2019, 07:52 PM IST
தமிழகத்தில் போட்டியிடும் 5 பாஜக வேட்பாளர்கள் இவர்கள் தான்…. வெளியான புதிய தகவல் !!

சுருக்கம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் ?யார் ? என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இன்று இரவோ அல்லது நாளையோ பாஜகவின் தமிழக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 

இதில் அதிமுக 20… பாஜக 5 … பாமக  7… தேமுதிக 4 .. புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள்  தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் யார்? யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் , ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசையும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!