
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றி மலை, ராம் நகர் உள்ளிட்ட 10 இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் வருமான வரித்துறையினர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் 4-வது நாளாக இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாது செந்தில் பாலஜியின் உறவினர்கள் ரூ.60 கோடி வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.