4 தீர்மானங்கள் நிறைவேற்றம் - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு ...

Asianet News Tamil  
Published : Sep 04, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
4 தீர்மானங்கள் நிறைவேற்றம் - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு ...

சுருக்கம்

4 resolutions have been fulfilled at all party meetings

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 4  தீர்மானங்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றபட்டுள்ளன. 

நீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது. 

இதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. 

இதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைதொடர்ந்து திமுக சார்பில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் காசோலையை அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வழங்கினார். 

மேலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி தற்போது சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், கி.வீரமணி, உள்ளிட்டோர் கலைந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்ற்பாட்டுள்ளன. அதாவது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 4  தீர்மானங்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றபட்டுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!