ஆட்சியை கைப்பற்ற ஜெட் வேகத்தில் திமுக... திணறும் அதிமுக..!

By vinoth kumarFirst Published Apr 19, 2019, 2:13 PM IST
Highlights

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தொடர்ந்து பொறுப்பாளர்களையும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தொடர்ந்து பொறுப்பாளர்களையும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று  நடைபெற்றது. மேலும், காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் அறிவித்தது. சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி. சண்முகையா, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.  

பொறுப்பாளர்கள் விவரம்;-

* திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களாக இ.பெரியசாமி மற்றும் மணிமாறன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* சூலூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களாக எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* அரவக்குறிச்சி  சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களாக பொன்முடி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களாக கே.என்.நேரு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் திணறி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர்களை அறிவித்து பொறுப்பாளர்களை அமைத்து ஜெட் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. 

click me!