30 எம்.எல்.ஏ.-க்களுடன் டிடிவியோடு சென்று விடுவேன்...! எடப்பாடியை அதிரவைத்த விஜயபாஸ்கர்!

By vinoth kumarFirst Published Sep 12, 2018, 11:39 AM IST
Highlights

குட்கா விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ 
சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் 
விஜயபாஸ்கர் சந்தித்திருந்தார்.

குட்கா விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்திருந்தார். சிபிஐ ரெய்டு விஜயபாஸ்கருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, குட்கா விவகாரம் தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு விழாக்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண்டிருந்தாலும், முதலமைச்சரை அவரது இல்லத்துக்கு சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தது முக்கிய விஷயமாக கருதப்பட்டது.

இந்த நிலையில், 30 எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரனோடு சென்று விடுவேன் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது மூத்த பத்திரிகையாளர்களின் தகவல் பரிமாற்றத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது வாட்ஸ் அப் செய்தியை விவரம் தெரிந்தவர்கள் கூட உறுதிபடுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாட்ஸ் அப் செய்தியை சாதாரண ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரூபத்தில் சிக்கல் வரும் என்றும் கூறப்படுகிறது.

click me!