3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் எடப்பாடி..!

Published : Jul 26, 2019, 05:48 PM IST
3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் எடப்பாடி..!

சுருக்கம்

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. இதனையடுத்து, 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 

இதனையடுத்து, தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். மேலும், சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் தப்பியது. இதனிடையே, அதிருப்தியில் இருந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். 

இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வரும் 30-ம் தேதி திரும்ப பெற உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
60 ஆண்டுகால நிராசை.. தமிழகத்தில் ராகுல் ட்விஸ்ட்..! சல்லி சல்லியாக நொறுங்கும் தமிழக காங்கிரஸார்..!