வாடகை தாய் மகப்பேறு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவிங்க..!

By vinoth kumarFirst Published Oct 22, 2022, 8:03 AM IST
Highlights

வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு மகப்பேறு விடுப்பு குறித்த அறிவிப்பை  கடந்த ஏப்ரல் 21ம் தேதி சமூக நலன் மற்றும் உரிமைகள்துறை அமைச்சர் கீததா ஜூவன் தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார். 

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு 270 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு மகப்பேறு விடுப்பு குறித்த அறிவிப்பை  கடந்த ஏப்ரல் 21ம் தேதி சமூக நலன் மற்றும் உரிமைகள்துறை அமைச்சர் கீததா ஜூவன் தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார். இந்நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பானது 12 மாதங்களாக அதாவது ஓராண்டாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன் 3 மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பு 2016-ஆம் ஆண்டு 9 மாதங்களாக அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உயர்த்தி அறிவிக்கப்பட்ட இந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு 270 நாள்களாக விடுமுறை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறையை பெற சிகிச்சை அளித்த மருத்துவர் வழங்கிய சான்றிதழ் நிச்சயம் சமர்பிக்க வேண்டும். இந்த விடுவிப்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!