2 டோஸ் தடுப்பூசி போட்டால் போதும். RT-PCR நெகடீவ் சான்றிதழ் தேவையில்லை.. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி.

Published : Jul 22, 2021, 01:10 PM IST
2 டோஸ் தடுப்பூசி போட்டால் போதும். RT-PCR நெகடீவ் சான்றிதழ் தேவையில்லை.. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி.

சுருக்கம்

சென்னையிலிருந்து கேரளா, மகராஷ்டிரா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ் இனிமேல் தேவையில்லை எனவும், 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே போதும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து கேரளா, மகராஷ்டிரா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ் இனிமேல் தேவையில்லை எனவும், 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே போதும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளா, மகராஷ்டிரா மாநிலங்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டிருந்தால், அந்த சான்றிதழை காட்டி இனி விமானங்களில் பயணிக்கலாம் என்றும், தடுப்பூசிகள் போடாதவா்கள் RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடன் தான் விமானங்களில் பயணிக்க முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனா். 

சென்னையிலிருந்து கேரளா மாநிலம்  திருவனந்தபுரம்,கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் மற்றும் மகராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அவுரங்கபாத் ஆகிய நகா்களுக்கு விமானங்களில் பயணிப்பவா்கள் RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடன் தான் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே அமுலில் உள்ளது. ஆனால் தற்போது அதில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் 2 டோஸ்கள் போட்டவா்கள், அதற்கான சான்றிதழ்களுடன் சென்னையிலிருந்து, கேரளா, மகராஷ்டிரா மாநிலங்களுக்கு விமானங்களில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா்களுக்கு RT-PCR நெகடீவ் சான்றிதழ்கள் தேவையில்லை. ஆனால் 2 டோஸ் தடுப்பூசிகள் போடாதவா்கள், பயண நேரத்திலிருந்து  72 மணி நேரத்திற்க்குள் எடுக்கப்பட்ட RT-PCR நெகடீவ் சான்றிதழ்களுடனே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனா். இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனா்.

 

PREV
click me!

Recommended Stories

டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!