நடுக்கடலில் ஆட்டம் போடும் கொரோனோ வைரஸ்...!! சிக்கி தவிக்கும் 3711 பேர், மீட்க மோடிக்கு கோரிக்கை...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2020, 6:01 PM IST
Highlights

இந்நிலையில் அந்த கப்பலில் சுமார் 170 இந்தியர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் அந்த கப்பலில் இருந்து வெளியேற முடியாமல் கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மத்தியில்  இந்தியர்கள் தவித்து வருகின்றனர். 
 

கொரோனா வைரஸ் பிடியில் நடுக்கடலில் சொகுசு கப்பலில் சிக்கித்தவிக்கும் தங்களை மீட்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அந்த கப்பலில் உள்ள இந்தியர்கள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர் .  சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா  வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது .  அதில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த வைரஸ் சுமார் 23 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.   சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானிலும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

 

இந்நிலையில் ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருந்து தங்களை பாத்திரமாக மீட்டுச் செல்லுமாறு அக்கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஹாங்காங்கிலிருந்து டைமண்ட்  பிரின்சஸ் என்ற பிரிட்டிஷ் சொகுசு கப்பல் ஜப்பான் துறைமுகத்துக்கு சென்றது ,  அந்தக் கப்பலில் சுமார்  3,711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர் .  கொரோனா  வைரஸ் பீதி காரணமாக அந்த சொகுசு கப்பல் நடுகடலிலேயே நிறுத்தப்பட்டு , தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் மருத்துவ குழு கப்பலுக்கு சென்று பயணிகளை சோதனை செய்ததில்  இதுவரை இந்த கப்பலில் உள்ள 120 பேருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் அந்த கப்பலில் சுமார் 170 இந்தியர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் அந்த கப்பலில் இருந்து வெளியேற முடியாமல் கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மத்தியில்  இந்தியர்கள் தவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் டைமண்ட் பிரின்சஸ்  கப்பலில் உள்ள இந்தியர்களில் சிலர் பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.அதில், நடுக்கடலில் கப்பலில்  கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மத்தியில் இருக்கும் எங்களுக்கு இது வரையில் யாரும் எந்த பரிசோதனையும் செய்யவில்லை,   உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள எங்களை காப்பாற்றுங்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு  வீடிய மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.   நோய் பாதிப்பு உள்ளவர்கள் அந்த கப்பல் அறைக்குள்ளேயே தங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ள நிலையில் இந்தியர்கள் பிரதமரிடம் உதவி கேரியிருப்பது குறிப்பிடதக்கது.  

 

 

click me!