சத்தீஸ்கரில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை நீட்டிப்பு... அதிரடி காட்டிய காங்கிரஸ் முதல்வர்..!

By vinoth kumarFirst Published May 18, 2020, 2:45 PM IST
Highlights

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நோயின் தாக்கம் சற்றும் குறையவில்லை. ஆகையால், 4வது முறையாக ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டிப்பதாக  மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மாநில அரசுகள் சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு சூழ்நிலைக்கு ஏற்ப நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதிலும், பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் பாதிப்பே 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில், 59 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!