கிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..!

Published : Jul 05, 2020, 09:35 PM IST
கிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..!

சுருக்கம்

 இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஏன் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில், 2017-ல் 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு எதையும் அப்போது பிறப்பிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுக்குக் கடிதம் அனுப்பினார். இந்த விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு ஜூலை 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 
கடந்த 2017-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு  நம்பிக்கை வாக்கு கோரியபோது ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு திமுக சென்றது.


நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திம் முடிவெடுத்து ஒரு மாதத்துக்குள் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றது திமுக. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ தீர்ப்பு வழங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சபாநாயகர் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானது. ” என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மணிப்பூர் வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அணி மாறிய ஐந்து எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் சில  தினங்களுக்கு முன்பு தடை விதித்தது. மணிப்பூர் போல தமிழகத்திலும் 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைய  தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் மனுவில் குறிப்பிடப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது.  தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,  ஓபிஎஸ் தரப்பு, 11 எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று வாதாடியது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஏன் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில், 2017-ல் 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு எதையும் அப்போது பிறப்பிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுக்குக் கடிதம் அனுப்பினார். இந்த விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு ஜூலை 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!