10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் அதிரடி மாற்றம்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 19, 2020, 12:46 PM IST
Highlights

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவதாக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவதாக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக  மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  கொரோனா பரவல் குறையாததால் மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர். மேலும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும். 12-ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு ஜூன் 18-ம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

புதிய தேர்வு அட்டவணை விவரம்:-

ஜூன் 15-ம் தேதி : மொழிப்பாடம்
ஜூன் 17-ம் தேதி : ஆங்கில பாடம்
ஜூன் 19-ம் தேதி : கணிதம்
ஜூன் 20-ம் தேதி : விருப்ப மொழி
ஜூன் 22-ம் தேதி : அறிவியல்
ஜூன் 24-ம் தேதி : சமூக அறிவியல்
ஜூன் 25-ம் தேதி : தொழிற்பாடம்.

click me!