கொலைவெறியில் கொரோனா... இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு பாதிப்பு... எகிறும் பாதிப்பால் திணறும் தலைநகரம்..!

Published : Jun 02, 2020, 06:31 PM ISTUpdated : Jun 02, 2020, 06:39 PM IST
கொலைவெறியில் கொரோனா... இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு பாதிப்பு... எகிறும் பாதிப்பால் திணறும் தலைநகரம்..!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,586ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை எட்டியுள்ளது. 

தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,586ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக பாதிப்பு ஆயிரத்தை எட்டியுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் வசிப்பவர்கள் என்று பார்த்தால் 1036, மீதம் இருப்பவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்ராவில் இருந்து தமிழகம் வந்த 40 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,585 அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  24,586ஆக உயர்ந்துள்ளது.

இன்று 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 536 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால், மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 3ஆம் நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!