10 முறை போட்டி... 5 தடவை வெற்றி.. 4 தோல்விகள்... எடப்பாடி பழனிசாமி சமன் செய்வாரா..? சாதிப்பாரா..?

Published : Apr 08, 2021, 03:23 PM IST
10 முறை போட்டி...  5 தடவை வெற்றி.. 4 தோல்விகள்... எடப்பாடி பழனிசாமி சமன் செய்வாரா..? சாதிப்பாரா..?

சுருக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக முதல் முறையாக களமிறங்கும் தேர்தல் இது. 10 சட்டமன்றத் தேர்தலில் அவர் அதிமுக சார்பாக போட்டியிட்டு 5 முறை வெற்றியும், 4 முறை தோல்வியும் கண்டுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக முதல் முறையாக களமிறங்கும் தேர்தல் இது. 10 சட்டமன்றத் தேர்தலில் அவர் அதிமுக சார்பாக போட்டியிட்டு 5 முறை வெற்றியும், 4 முறை தோல்வியும் கண்டுள்ளார். 

1989ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் எடப்பாடி பழனிசாமி. அடுத்து 1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதே எடப்பாடி தொகுதியில் களமிறங்கி மீண்டும் வெற்றிபெற்றார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எடப்பாடியில் தோல்வியை தழுவினார். 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் இருந்து திருச்செங்கோடு தொகுதிக்கு மாறி போட்டியிட்டு வென்றார். மீண்டும் அதே தொகுதியில் 1999ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். 2004ம் ஆண்டும் திருச்செங்கோட்டில் தோல்வி அடைந்தார்.  

திருச்செங்கோட்டில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை தொடர் தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2001 சட்டசபை தேர்தலில் மீண்டும் தனது எடப்பாடி தொகுதிக்கு மாறி போட்டியிட்டார்.  அப்போதும் தோல்வியை சந்தித்தார். 2011ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியை அதிமுக தலைமை அவருக்கு ஒதுக்கியது.  மூன்றுமுறை தொடர் தோல்வியை அடைந்த அவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.  அடுத்து 2016ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றார். 2021 ம் ஆண்டும் எடப்பாடியில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் அவர் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.   

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை