கொரோனோ வைரஸ்க்கு மருந்து கண்டுபிச்சா...1கோடி பரிசு..!! ஜாக்கிஜான் அறிவிப்பு..!!

By Thiraviaraj RMFirst Published Feb 10, 2020, 11:58 PM IST
Highlights

இது பணத்தை பற்றிய விஷயம் அல்ல. எப்போதும் மிகுந்த பரபரப்பான வீதிகள் எல்லாம் இப்படி வெறிச்சோடி கிடப்பதை பார்க்க நான் விரும்பவில்லை. என்னுடைய தோழர்கள் இந்த வைரஸ் உடன் போராடிக் கொண்டிருப்பதை என்னால் தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அவர்கள் மரணமடைவதை என்னால் பார்க்க எனக்கு இதயமில்லை.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 
 By; T.Balamurukan

கரோனோ வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று உலகப்புகழ் பெற்ற ''ஜாக்கிசான்'' சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்திருக்கிறது. 

சீனாவின் யுகான் மாகாணத்தில் கரோனோ வைரஸ் தாக்குதல் சீனாவை அதிர வைத்திருக்கிறது.  கரோனோ வைரஸ் இதுவரை 900-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டு விட்டது. ஆனாலும், உயிரிழப்பு நின்றபாடில்லை. சீன மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த வைரஸ்க்கு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கரோனோ வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்ற உலகப்புகழ் பெற்ற ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசானின் சமூக வலைதள பதிவு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பாக ஜாக்கி சான் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கரோனோ வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யென் பணம் வழங்குவேன் என்று அறிவித்துள்ளார். அதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ1.02 கோடி ஆகும். 
அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்துதான் இந்த வைரஸை வெற்றிகொள்ள வழி பிறக்கும். என்னைப்போல் பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன். கரோனோவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். எனது ஒரு சின்ன யோசனை. தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இதற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென் தொகையால் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

click me!